×

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் விவசாயம் காக்க சைக்கிள் பயணம் சினிமாவை காக்க நடை பயணம்

திருச்சி, பிப்.25: விவசாயத்தை காக்கக் கோரி திருச்சியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவர் கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். அதே போல சினிமாவை காக்கக் கோரி இயக்குனர் ஒருவர் நடைபயணம் மேற்கெண்டார். இருவரும் நேற்று திருச்சி வந்தனர்.மண்ணச்சநல்லூர் தாலுகா, பூலாம்பாளையம் அருகே வடக்கிப்பட்டி கிராமம் ஊர்காடு பகுதியை சேர்ந்தவர் தமனான் மகன் பாலமுருகன்(26). 12ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். விவசாய நிலங்கள் அழிந்து வருவதை தடுக்க வேண்டும் என எண்ணிய இவர், கடந்த 10ம் தேதி திருச்சியிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்றார். அங்கு ஒரு புது சைக்கிள் வாங்கிய அவர், விவசாய நிலங்களை பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். விவசாய நிலங்களை விற்பனை செய்யக்கூடாது, அதற்கு அரசு கடும் சட்டங்களை இயற்றி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சைக்கிள் முழுவதும் வைத்துள்ளார். பாலமுருகன் பல்வேறு ஊர்களை கடந்து நேற்று திருச்சி வந்தார். கலெக்டர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் இது குறித்து அவர் கூறுகையில், ‘சென்னை தலைமை செயலகம் சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விவசாய நிலங்களை காக்கக்கோரி எனது விழிப்புணர்வு பயணத்தை எடுத்துக்கூறி மனு அளிக்க உள்ளேன்’ என்றார்.
அதே போல தமிழ் திரையுலகை காக்கக் கோரியும், நல்ல படங்களை தமிழக அரசே வெளியிட உதவி செய்யக் கோரியும் தண்டச்சோறு என்ற படத்தின் இயக்குனர் நேற்று நடைபயணமாக திருச்சி வந்தார்.தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் ராஜன்போஸ்(60). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த 23 ஆண்டுகளாக வசிக்கிறார். சினிமா மீதான மோகத்தால் தனது ராணுவ பணியை ராஜினாமா செய்து விட்டு திரைக்கதை, பாடல்கள், வசனம் எழுதி வந்தார். தண்டச்சோறு என்ற படத்தை இயக்கினார். ஆனால் போதிய நிதியில்லாததால் அந்த படம் பெட்டியிலேயே முடங்கி கிடக்கிறது. இதனால் நல்ல படங்களை இயக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கோட்டையிலிருந்து சென்னை கோட்டையை நோக்கி கடந்த 8ம் தேதி நடை பயணம் புறப்பட்டார். அவரும் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். இது குறித்து இயக்குனர் ராஜன்போஸ் கூறுகையில், ‘நான் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளேன். நல்ல படங்கள் வெளியாக பெரும் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. புதுமுக இயக்குனர்களை ஊக்குவிக்கவும், நல்ல படங்களை மக்களை சென்றடையவும் அரசு பாலமாக இருந்து உதவி வேண்டும்.

இதை வலியுறுத்தி எனது நடை பயணம் துவக்கி உள்ளேன். சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளிக்க உள்ளேன்’ என்றார்.எறும்பீஸ்வரர் கோயிலை நவீனப்படுத்த வேண்டும்அரசு கல்லூரி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்விவசாய நிலங்களை விற்பனை செய்யக்கூடாது, அதற்கு அரசு கடும் சட்டங்களை இயற்றி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சைக்கிள் முழுவதும் வைத்துள்ளார்.

Tags : Bicycle tour ,
× RELATED விவசாயம் காக்க சைக்கிள் பயணம்...