×

டிஆர்இயூ வலியுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

நாகை, பிப். 25: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரவீன் பி நாயர் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 13 மனுக்களும், பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 291 மனுக்கள் என மொத்தம் 304 மனுக்கள் பெறப்பட்டது.

தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பிரவீன் பிநாயர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் பெட்டிக்கடை வைப்பதற்கு மறுவாழ்வு நிதியாக 5 நபர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகளையும், ஒரு நபருக்கு கறவை மாடு வாங்கிட ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் நவீன மூன்று சக்கர சைக்கிள் மற்றும் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1500 வீதம் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார். டி ஆர் ஓ இந்துமதி, தனித்துணை கலெக்டர் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Collector's Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்