×

கொள்ளிடம் அருகே திருக்கருக்காவூர்- கிளாத்தோப்பு இடையே சாலை அமைக்கும் பணி ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்

கொள்ளிடம், பிப். 25: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருக்கருக்காவூர் கிராமத்திலிருந்து கிளாத்தோப்புக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் தூர தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கிராமச் சாலைகளை மேம்படுத்தும் பணியை முறையாக செயல்படுத்த வேண்டும். சாலை தரமற்றதாக இருந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் கிளாத்தோப்பு, திருக்கருக்காவூர், வெள்ளிடைநாதர் கோயிலுக்குச் செல்லும் சாலை அமைக்கும் பணியையும் ஒன்றியக்குழு தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் அப்பகுதியில் உள்ளவர்கள் குடிநீர்த்தட்டுப்பாட்டை நீக்க கோரிக்கை விடுத்தனர். குடிதண்ணீர் பிரச்னை உடனடியாக தீர்க்கப்படும் என்று பொதுமக்களிடம் உத்தரவாதமளித்தார். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா, ஊராட்சிமன்றத்தலைவர் சத்யா உதயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : union committee ,road ,Klathoppu ,Kolli ,Thirukarukavur ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...