கல்லூரி அருகே இயங்கும் டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?

தூத்துக்குடி, பிப். 25: தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி மாற்றுத்திறனாளிகள் நல கூட்டமைப்பு  சார்பில் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு  கொடுக்கப்பட்டது. மனுவில், மாற்றுத்திறனாளிகள் நல கூட்டமைப்பை சேர்ந்த  நாங்கள், பேரூரணி கிராமத்தில் 16 ஆண்டுகளாக வசித்து  வருகிறோம். வீட்டு வரி, குடிநீர் வரி, மின்கட்டணம் ஆகியவற்றை முறையாக செலுத்தி வருகிறோம். எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை,  ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவை உள்ளன. ஆனால் எங்கள் பகுதியில் உள்ள 19  பேரின் வீட்டுக்கு பட்டா இன்னும் வழங்கப்படவில்லை. எங்களுக்கு பட்டா வழங்க  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாயர்புரத்தை சேர்ந்த மச்சேந்திரன் கொடுத்த மனு: சாயர்புரம் போப் கல்லூரி அருகே அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இதனை  மாற்ற பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வருகிறார்கள். கல்லூரி அருகே  மதுபான கடை இருப்பதால் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள்  பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த மதுபான கடையை ஊருக்கு வெளியே அமைக்க  வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: