நெல்லை, தென்காசியில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

நெல்லை, பிப். 25: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்திய நிர்வாகிகள், கட்சிக் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர். திசையன்விளை: நாங்குநேரி, திசையன்விளை உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான நேற்று பிறந்த குழந்தைகளுக்கு அம்மா பேரவை சார்பில் மாவட்டத் தலைவர் ஏ.கே.சீனிவாசன் தங்க மோதிரம் வழங்கினார். இதே போல் நாங்குநேரி, ஏமன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்கும் நிகழ்ச்சியையும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஏ.கே.சீனிவாசன் துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சிகளில் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் நடராஜன், நாங்குநேரி ஒன்றிய கழக செயலாளர் விஜயகுமார்,நாங்குநேரி நகர செயலாளர் பரமசிவன்,ஒன்றிய எம்ஜியார் மன்ற செயலாளர் ஜெயபால், உறுமன்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பொன் இசக்கி பாண்டியன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாளர் கணேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உவரி வீரபாண்டியன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் அஜித்சிங், ராஜசேகர், நாங்குநேரி கூட்டுறவு வங்கித் தலைவர் சங்கர் ,பனைவெல்லம் கூட்டுறவு சங்கத் தலைவர் தர்மசீலன், இயக்குநர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி பஜாரில் அதிமுக சார்பில்  ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  அவரது படத்திற்கு நண்பகல் 12.30 மணியளவில் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ.  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சேரன்மகாதேவி சாட்டுப்பால  விநாயகர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு  அன்னதானம் வழங்கினார். பின்னர் பெண்களுக்கு இலவச சேலைகளும், ஆண்களுக்கு  மரக்கன்றுகளும் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். நிகழ்ச்சிகளில்  மாவட்ட துணைச் செயலாளர் செவல் முத்துசாமி, இலக்கிய அணி மாவட்டச் செயலாளர்  கூனியூர் மாடசாமி, நகரச் செயலாளர் வக்கீல் பழனிக்குமார், முன்னாள்  பேரூராட்சி மன்றத் தலைவர் இசக்கிபாண்டியன், முன்னாள் நகரச் செயலாளர் ஐசக்  பாண்டியன் மற்றும் நகர கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

Related Stories: