அணுகுசாலையை கண்டுகொள்ளாமல் தேசிய நெடுஞ்சாலையில் நின்றுசெல்லும் பஸ்களால் விபத்து அபாயம்

நாங்குநேரி. பிப். 25:  அணுகுசாலையை கண்டுகொள்ளாமல் தேசிய நெடுஞ்சாலைகளில் விதிகளை மீறும் நின்றுசெல்லும் அரசு பஸ்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளனர்.

நெல்லை நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் முறையாக நிற்பதில்லை. எப்போதாவது நின்றாலும் அணுகுசாலையைத் தவிர்த்து முக்கிய சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றனர். அப்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.

நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்தாமல் அணுகுசாலையில்தான் வாகனங்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என்ற விதி இருந்தும் அதனை மதிக்காமல் அனைத்து பஸ்களின் ஓட்டுனர்களும் வரைமுறையின்றி பஸ்களை இயக்கி வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இதனை கண்காணித்து போக்குவரத்து விதிகளின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் அணுகுசாலையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: