×

உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

கோவை, பிப். 25:  கோவையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ராஜாமணி துவக்கி வைத்தார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, ேரஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பாஸ்ட்புட் உணவை உண்ணாதே, பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பாதுகாப்பான உணவே ஆரோக்கியமான வாழ்வு, உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவீர் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து  கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உணவு பாதுகாப்பு குறித்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங் பணிகள், நுகர்வோர் அமைப்புகளுடன் இணைந்து மாணவர்கள், சுய உதவி குழுக்கள், அரசு ஊழியர்கள், நுகர்வோர்களுக்குவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், தனிமனித சுகாதாரம், உணவு பொருட்களின் மீது ஒட்டப்பட்டுள்ள லேபிள் விவரங்கள், கோடை, குளிர்கால உணவு முறைகள், கலப்பட உணவுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செல்வராசு, சொர்ணலதா, பாலகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் பேபி சகிலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Awareness rally ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி