×

பொதுமக்கள் கோரிக்கை பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

கரூர், பிப்.25: தாந்தோணிமலை ஒன்றியம் ஜெகதாபி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தாந்தோணிஒன்றியம் ஜெகதாபி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜெகதாபி குறுவளமைய பள்ளிகளின் ஆசிரியர் ஒருவர், 5 பெற்றோர், உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின்கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் தீனதயாளன் தலைமை வகித்துபேசினார். ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் முன்னிலைவகித்தார். உள்ளாட்சி நிர்வாகிகள் சக்திவேல், கார்த்தி, வட்டாரக்கல்வி அலுவலர் பழனிராசு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவ்ர சொக்கலிங்கம், வாழ்த்திப்பேசினர். கருத்தாளர்களான ஆசிரியர் பயிற்றுனர் செந்தாமரைசெல்வி, லிங்கத்தூர் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பரணிதரன், பேசினர். மேலாண்மைக்குழுவின் கடமைகள், பள்ளிகளில் சமூகத்தணிக்கை, பள்ளி உட்கட்டமைப்புவசதிகள், சுகாதாரம், குழந்தைகளின் உரிமைகள், கட்டாயக்கல்விச்சட்டம், போக்சோ சட்டம், பாலினச் சமத்துவம், பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு முறைகள், புதிய பாடத்திட்டம் கற்பித்தல் முறைகள், பள்ளியை தரமிட்டு மதிப்பிடுதல், மாணவர்களுக்கு ஊக்கம்தரும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Tags : Public Demand School Management Committee ,
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது