×

கோபால்பட்டியில் குடியுரிமை திருத்த சட்ட கண்டன கூட்டம்

கோபால்பட்டி, பிப். 25: சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியற்றிற்கு எதிராக அனைத்து மஹல்லா ஜமா அத்தார்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முகம்மது அலி அன்வாரி தலைமை வகித்தார். முன்னால் இமாம் பதுருத்தீன் ஹஜ்ரத் தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்களின் தேசிய பதிவை ரத்து செய்ய கோரி வலியுறுத்தப்பட்டது. இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக் அகமது, பாக்கர், சவுகத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Citizenship Amendment Meeting ,Gopalpatti ,
× RELATED கோபால்பட்டி பகுதியில் மின்தடை