ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலையில் டூவீலர் கவிழ்ந்து வாலிபர் பலி ‘விபத்து வாய்ப்பு எச்சரித்தும் அஜாக்கிரதை’

ஒட்டன்சத்திரம், பிப். 25: ஒட்டன்சத்திரம்- தாராபுரம் நான்கு வழிச்சாலையில் டூவீலர் கவிழ்ந்து வாலிபர் பலியானார். மின்விளக்கு இல்லாததால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரித்தும் அதிகாரிகள் அஜாக்கிரதையால் இந்த உயிர்பலி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒட்டன்சத்திரத்திரம் அருகே காவேரியம்மாபட்டியை சேர்ந்தவர் காளிச்சாமி (37). இவர் நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரத்தில் இருந்து தனது வீட்டிற்கு டூவீலரில் சென்றார். ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலையில் குறிஞ்சிநகர் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த காளிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த ஒட்டன்சத்திரம்- தாராபுரம் நான்கு வழிச்சாலையில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் எதிரே பாலம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பைப்புகள் மீது டூவீலர் மோதியுள்ளது. இந்த நான்கு வழிச்சாலையில் மின்விளக்குகள் இல்லாமல் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று கடந்த பிப்.15 தேதியில் தினகரன் நாளிதழில் செய்து வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகளின் அஜாக்கிரதையால் முதல் உயிர் பலி ஏற்பட்டு விட்டது.

Related Stories: