×

குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

வத்தலக்குண்டு, பிப். 25: வத்தலக்குண்டு மகாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நடந்தது. செயலாளர் ராம்தாஸ் தலைமை வகித்தார். வத்தலக்குண்டு மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி வாசிக்க மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை எலிசபெத்பாத்திமா நன்றி கூறினார்.

Tags :
× RELATED மக்களவையில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை...