×

செயல்படாத சின்டெக்ஸ் தொட்டிகளால் நிதி வீண்

சிவகாசி, பிப்.25: தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது  சிவகாசி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தலா ரூ.2.80 லட்சம் மதிப்பில் போர்வெல் கிணறுகள் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டிகளும் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகள் செயல்படாமல் கிடக்கிறது. சிவகாசி நகராட்சிக்கு வெம்பக்கோட்டை மற்றும் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கபட்டு வருகிறது. இந்த இரண்டு திட்டங்கள் மூலம் தினமும் 40 லட்சம் லிட்டர் வரை மட்டுமே குடிநீர் பெறப்படுகிறது. ஆனால் சிவகாசி நகராட்சி பகுதி மக்களுக்கு தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. எனவே அனைத்து ஆழ்துளை சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி