×

நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

நெல்லிக்குப்பம், பிப். 25 :  நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோயிலில் மாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் காந்திவீதியில் புகழ் வாய்ந்த ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள தாயாரம்மாள், சுதர்சன ஆழ்வார், வைஷ்ணவி, ஆண்டாள், ஆஞ்சநேயர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. பின்னர் வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் வேணுகோபால சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தம்பதியர்களாக  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ரமேஷ் பட்டாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்தார். வேணுகோபால பக்த ஜனசபா சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல் நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் தந்தை பெரியார் தெரு பகுதியில் உள்ள சாந்த காளியம்மன் கோயிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் சாந்த காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சாந்த காளியம்மன் உஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாலாஜி சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார். பக்தர்களுக்கு சுமங்கலி கயிறு வழங்கப்பட்டது.  

நெல்லிக்குப்பம் அருகே வெள்ளகேட் பகுதியில் சாந்தசூரி காளிபராசக்தி அம்மன் கோயிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள விநாயகர், முருகர், விஷ்ணு துர்க்கை, மயானகாளி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து உலக மக்கள் நலம் பெற வேண்டியும் சிறப்பு யாக வேள்விகள் நடந்தது. பின்னர் சாந்தசூரி காளிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகி பன்னீர் செல்வம் சுவாமிகள் சிறப்பு பூஜை, யாகம் செய்தார். சாந்தசூரி காளிபராசக்தி அம்மன் வார வழிபாட்டு மன்றம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Swing Festival ,Nellikuppam Venugopala Swamy Temple ,
× RELATED திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி...