×

லாட்ஜ்களில் திடீர் சோதனைகுமரியில் எஸ்.பி. தலைமையில்விடிய, விடிய ரோந்து: 1,123 பேர் மீது வழக்குபதிவு

நாகர்கோவில், பிப்.25 :  அமாவாசை தினத்தையொட்டி டார்க் நைட் சோதனை நேற்று முன் தினம் குமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. எஸ்.பி. நாத் தலைமையில்  அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை நடைபெற்றது. லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்துக்கிடமான வகையில் யாராவது தங்கி உள்ளார்களா? என்பது பற்றி விசாரணை நடந்தது. இரவு நேரங்களில் சுற்றி திரிந்த சந்தேகப்படும் நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. வாரன்ட் குற்றவாளிகள் 3 பேர் சிக்கினர்.

நேற்று முன் தினம் (ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால் ஒரே நாளில் போக்குவரத்து விதி மீறியதாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் துணை போலீஸ் சரகத்தில் 303 வழக்குகளும், தக்கலையில் 339 வழக்குகளும், குளச்சலில் 253 வழக்குகளும், கன்னியாகுமரியில் 228 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஹெல்மெட் வழக்குகள் மொத்தம் 586 ஆகும். நாகர்கோவில் சரகத்தில் 139 பேரும், தக்கலையில் 166 பேரும், குளச்சலில் 153 பேரும், கன்னியாகுமரியில் 128 பேரும் சிக்கினர். மேலும் குடிபோதையில் பைக், கார், ஆட்டோ ஓட்டி வந்ததாக 17 பேர் பிடிபட்டனர். சீட் பெல்ட் அணியாமல் காரில் வந்த 101 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. டிரிபிள்ஸ் 28 பேரும், செல்போன் டிரைவிங் 14 பேரும் சிக்கினர்.


Tags : SB ,Lodges ,
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...