அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் கம்பெனிக்கு சீல்

சென்னை: அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் கம்பெனிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் பாட்டில் குடிநீர் தயாரிக்கும் தனியார் கம்பெனி கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இங்கு 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.இந்த கம்பெனி வருவாய் துறை அனுமதியின்றி இயங்குவதாக பெரும்புதூர் ஆர்டிஓ திவ்யக்கு புகார் வந்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர், விஏஓ, வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு கடந்த 7ம் தேதி  நேரில் சென்று ஆய்வு செய்தனர்.அப்போது, அனுமதியின்றி பாட்டில் குடிநீர் தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.

 ஆனால் தொழிற்சாலை சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால், பெரும்புதூர் ஆர்டிஓ திவ்ய, பெரும்புதூர் தாசில்தார் ரமணி உள்பட வருவாய் துறை அதிகாரிகள், மின்சார வாரியம் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீசார் நேற்று  சம்பவ இடத்துக்கு சென்று, அந்த கம்பெனிக்கு சீல் வைத்தார். தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல் குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் பகுதியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட தனியார் குடிநீர் கம்பெனிக்கு, பெரும்புதூர் ஆர்டிஓ திவ்ய சீல் வைத்தார்.

Related Stories: