கைதிகளுக்கு இடப்பற்றாக்குறை புழல் மத்திய சிறைச்சாலையில் கூடுதல் கட்டிட பணி தீவிரம்

புழல்: புழல் மத்திய சிறைச்சாலையில் விசாரணை பிரிவு கட்டிடத்தில் 1,800 பேரும், தண்டனை பிரிவில் 750 பேரும், மகளிர் பிரிவில் 140க்கும் மேற்பட்ட பெண்களும் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது நாளுக்கு நாள் பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கூடுதல் கைதிகளை அடைக்க இடமில்லாமல் சிறைத்துறை அதிகாரிகள் அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக, விசாரணை பிரிவில் உள்ள லாக்கப் அறைகளில் 1,500 பேர் மட்டுமே அடைக்க முடியும். ஆனால், தற்போது இப்பிரிவில் கூடுதலாக 300க்கும் அதிகமானோரை அடைத்து வைத்துள்ளனர். இதனால் புழல் சிறை வளாகத்தில் இடப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்நிலையில், புழல் சிறை வளாகத்தில் கூடுதலாக 400 பேர் தங்கும் அறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியம் சார்பில் கடந்த ஓராண்டு காலமாக கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்ததும் இங்கு கைதிகளை அடைக்கப்படுவர். அப்போது, இட நெருக்கடி குறையும் என சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Related Stories: