×

குடும்ப தகராறில் சோகம் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவனும் சாவு: குழந்தைகள் கதறல்

சென்னை: கேளம்பாக்கம் அருகே பனங்காட்டுப்பாக்கம் கிராமத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவனும் தீயில் சிக்கி, உடல் கருகி பலியானார். கேளம்பாக்கம் அருகே பனங்காட்டுப்பாக்கம் கிராமம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (40). இவரது மனைவி சாந்தி (30). தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு நிதீஷ் (8), ஹரிணி (6) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் புதுப்பாக்கம் தனியார் காஸ் ஸ்டவ் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு வேலையில் இருந்து திரும்பியதும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை தூங்க வைத்து விட்டு தம்பதி இருவரும் தகராறு செய்து சாப்பிடாமலேயே தூங்கிவிட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் சாந்தி எழுந்து வீட்டில் தயாராக வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். இவரது அலறல் சத்தம்கேட்டு தூங்கிக்கொண்டிருந்த இளங்கோ மனைவியை கட்டிப்பிடித்து காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது, அவரது உடலிலும் தீப்பற்றியது. இருவரது அலறல் சத்தம்கேட்டு தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகள் இருவரும் எழுந்து பார்த்து கூச்சலிட்டு கத்தினர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கதவை உடைத்து இருவரையும் மீட்டனர். இதில் சாந்தி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளங்கோவை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இளங்கோ பலியானார். இறந்த சாந்தியின் சகோதரி பவானி அளித்த புகாரின்பேரில் காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் தீக்குளித்து பலியான பெற்றோரின் சடலங்களை பார்த்து குழந்தைகள் இருவரும் கதறி அழுதனர்.

Tags : family dispute ,
× RELATED வேறு பெண்ணுடன் வாழ முடிவு செய்ததால்...