×

பெரும்பாக்கம் சவுமியா நகரில் அடித்து கொல்லப்பட்டவர் யார்?: 5 பேர் சிக்கியும் அடையாளம் தெரியாமல் போலீசார் திணறல்

வேளச்சேரி: பெரும்பாக்கம் சவுமியா நகர் 3வது தெருவில் உள்ள பூங்கா அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் காயங்களுடன் இறந்து கிடப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு கடந்த 17ம் தேதி தகவல் கிடைத்தது. போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பூங்கா அருகே வீடு கட்டுமான பணி நடந்து வருவதும், இங்கு தங்கி வேலை செய்த மேற்கு வங்கம், ஆந்திரா, திருவண்ணாமலை பகுதிகளை சேர்ந்த 6 பேர் திடீரென தலைமறைவானதும் தெரியவந்தது. இதையடுத்து கட்டிட மேற்பார்வையாளர் ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த பாண்டியன் (39) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சம்பவம் நடந்த அன்று செல்போன் திருட வந்த ஆசாமி என்ற சந்தேகத்தில் தொழிலாளிகள் தாக்கியதாகவும், அவர் மயங்கி விழுந்ததால் தூக்கி சென்று பூங்கா அருகே படுக்க வைத்துவிட்டு வந்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து, தொழிலாளிகளின் மொபைல் எண்களை ஆராய்ந்து மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது செபதுல்லா இஸ்லாம் (35), சுக்மேன் (27) ஆகிய இருவரையும் போலீசார் ஒடிசாவில் கைது செய்தனர். இருவரும் கொடுத்த தகவலின்பேரில் தலைமறைவாக இருந்த திருவண்ணாமலையை சேர்ந்த தமிழரசன் (23), தர் (22), கட்டிட மேற்பார்வையாளர் பாண்டியன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த கொலை நடந்து 5 நாட்களுக்கு மேலாகியும் இறந்து கிடந்தவர் யார் என்று அடையாளம் காண்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags : city ,Soumya ,
× RELATED தமிழகத்தில் இன்று முதல் நகர...