×

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி பெருந்திருவிழா இன்று தொடங்குகிறது

தேவதானப்பட்டி, பிப். 21: தேவதானப்பட்டி அருகே, மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில், மாசிமகா சிவராத்திரி பெருந்திருவிழா இன்று இரவு தொடங்குகிறது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே 3 கி.மீ தொலைவில் மஞ்சளாற்றின் நதிக்கரையில், மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது.

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக, இக்கோயில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்தாண்டு மாசி மகாசிவராத்திரி திருவிழாவுக்கு கடந்த 1ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று இரவு பெருந்திருவிழா தொடங்க உள்ளது. இன்று முதல் வரும் 28ம் தேதி வரை விழா நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் திருவிழாவைக் காண பக்தர்கள் வருவார்கள். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள், சுகாதாரக் குழுவினர்கள், பணியாளர்கள் கோயிலில் முகாமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

Tags : festival ,Masi Maha Shivaratri ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...