×

இளையான்குடி கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேராசிரியர்களுக்கு மெமோ

இளையான்குடி, பிப். 21: இளையான்குடியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே படிக்கும் இந்த கல்லூரியில் சுமார் 2400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பொன்விழா ஆண்டிற்கு கட்டாய வசூல் செய்ய நிர்பந்தம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து, கடந்த பிப். 12ம் தேதி விடிய, விடிய பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக 2 பேராசிரியர்களை, கல்லூரி நிர்வாகம் சஸ்பென்ட் செய்த நிலையில், கடந்த பிப். 13ம் தேதி நிர்வாகம், பேராசிரியர் தரப்பினரிடம் நேரில் வந்து விசாரித்து பேசிய, கல்லூரி இனை இயக்குனர் பாஸ்கரன், வரும் பிப். 29ம் தேதிக்குள் இருதரப்புக்கும் இடையில் சுமூகமான முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில் கல்லூரியில் ஊடகம், பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்ததாகவும், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் 14 பேராசிரியர்களுக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம், பேராசிரியர் தரப்பில் சுமூகமான முடிவு எடுக்க உறுதியளித்த நிலையில், இப்படி மெமோ கொடுத்தது பேராசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், ‘முதலில் பத்திரிக்கையாளர்கள் கல்லூரி முதல்வர், நிர்வாகத்தை சந்தித்த பின்புதான் எங்களை சந்தித்தனர். உள்ளிருப்பு போராட்டம் குறித்து கேட்டதற்கு உரிய காரணத்தை கூறினோம். கல்லூரி விதியை மீறுவதாக சொல்வது ஏற்புடையதல்ல. இது இனை இயக்குனரின் உத்தரவை மீறுவதாக உள்ளது’ என்றனர்.

Tags : professors ,protest ,Ilangudi College ,
× RELATED போலியான பி.எச்.டி சான்றிதழ்கள் அளித்து...