×

கமுதி அருகே திமுகவில் இணைந்த 200 அதிமுகவினர்

கமுதி, பிப்.21: கமுதி அருகே டி.புனவாசலில் 200 அதிமுக.வினர் திமுகவில் இணைந்தனர். கமுதி அருகே டி.புனவாசல் கிராமத்தில் டி.புனவாசல், வல்லக்குளம், வலையங்குளம், சிம்பூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த அதிமுகவினர் 200 பேர் திமுக.வில் இணைந்தனர். திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளரும், வடக்கு மாவட்ட கவுன்சிலருமான வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ், ஒன்றிய துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், தெற்கு மாவட்ட கவுன்சிலர் சசிகுமார், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags : DMK ,Kamuthi ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...