×

ரெட்கிராஸ் 100ம் ஆண்டு விழா

ராமநாதபுரம், பிப்.21: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நூறாம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் அமானுல்லா ஹமீது வரவேற்றார். ராசாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளர் செல்லத்துரைஅப்துல்லா தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் விநாயகமூர்த்தி கலந்துகொண்டு கல்லூரியின் பங்களிப்பு குறித்து விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரிகள் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது, மேற்பார்வையாளர்கள் சாயுல்லா, வள்ளிநாயகம் செய்திருந்தனர்.

Tags : anniversary ,Red Cross ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா