×

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்

தொண்டி, பிப்.21:   தமிழக முதல்வர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் இஸ்லாமியர்களை கவரும் விதமாக ஹஜ் பயணிகள் தங்கும் விடுதி 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும். உலாமாக்கள் ஓய்வூதியம் ரூ.1500லிருந்து 3 ஆயிரமாக உயர்த்தப்படும்.  என அறிவித்தார். தமிழக அரசு குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தங்களுக்கு சலுகை அளிப்பதால் எந்த பயனும் இல்லை என்று இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா கூறுகையில், இஸலாமியர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் பெரும்பாலானோரை பாதிக்கும் விதமாக குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்படுகிறது. உரிய ஆவணம் இல்லாமல் அனைத்து மதத்திலும் மக்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே அகதிகளாக்கப்படுவார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமே அதிகளவில் போராட்டம் நடத்தி வருவதால் அவர்களை கவரும் விதமாக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இது எவ்விதத்திலும் திருப்தி படுத்தாது. இந்த சலுகைகள் எதுவும் எங்களுக்கு தேவையில்லை. குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட கருப்பு சட்டங்கள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்றார்.

Tags : organizations ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!