×

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் புத்தாக்க செயல் திட்ட கூட்டம்

பொன்னேரி, பிப். 21: மீஞ்சூரில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊரக புத்தாக்க செயல் திட்ட விளக்க கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 55 பஞ்சாயத்துகளில் தமிழக உள்ளாட்சி துறை மற்றும் ஊரக புத்தாக்க திட்டம் சார்பில், புதிதாக தேர்வான ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஊரக புத்தாக்க செயல்திட்டம் குறித்து நேற்று மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு அறிவித்துள்ள புத்தாக்க திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து, அவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் முறை குறித்து மாவட்ட புத்தாக்க திட்ட அலுவலர் வசந்த்குமார் விளக்கி கூறினார்.

பின்னர், வரும் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் குடிநீர் பிரச்னைக்கு முற்றிலும் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மரம் வளர்த்தல், கிராம தூய்மை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ஆணையர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் அத்திப்பட்டு துணை தலைவர் ஏடிஜி.கதிர்வேல், காணியம்பாக்கம் ஜெகதீசன், கொண்டக்கரை மனோகர், காட்டுப்பள்ளி சேதுராமன், வாயலூர் கோபி, கூடுவாஞ்சேரி ராஜேஷ்கண்ணா, வல்லூர் ஜெயக்குமார், அனுப்பம்பட்டு சார்லஸ், சுப்பாரெட்டி பாளையம் சதாசிவம், ஏறுசிவன் வெங்கடகிருஷ்ணன், காட்டாவூர் மங்கை உமாபதி, அரசூர் ஏழுமலை, காட்டூர் செல்வராமன், பெரிய கரும்பூர் பாபு, திருவெள்ளிவாயல் ரவிச்சந்திரன், தடபெரும்பாக்கம் பாபு, கொடூர் கஸ்தூரி மகேந்திரன், ஆவூர் டில்லிபாபு, ஏலியம்பேடு சுகுணா சிவகுமார் உள்பட 55 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் செயலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் நந்தியம்பாக்கம் கதிரவன், வன்னிபாக்கம் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Innovation Project Meeting ,Minajur Panchayat Union ,
× RELATED திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்...