×

குடிநீர் பிரச்னையை உடனே தீர்க்க வேண்டும் : கலெக்டரிடம் டி.ஆர்.பாலு எம்பி வலியுறுத்தல்

காஞ்சிபுரம், பிப்.21: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க அப்பகுதியிலுள்ள நீராதாரங்களை கண்டறிந்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பொன்னையாவிடம், எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் கடந்த 4 மாதங்களாக திமுக எம்பி டி.ஆர்.பாலு குறைதீர் முகாம்கள் நடத்தி மனுக்களை பெற்றார். முதல்கட்டமாக கடந்த ஆண்டு நவம்பரில் கலெக்டரை சந்தித்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அளித்தார். அதன்படி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதைதொடர்ந்து, கடந்த மாதம் பெரும்புதூர், படப்பை உள்பட 68 கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில் 445 மனுக்களை காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவிடம் , வழங்கிய எம்பி டி.ஆர்.பாலு, அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது இதனை கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக மனுக்கள் பெறப்பட்டு 70 சதவீத மனுக்கள்  மீது தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது 2ம் கட்டமாக மனுக்கள் பெறப்பட்டு கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முழுவதும் உள்ள நீர் ஆதாரங்களை மேப் மூலம் மற்றும் அரசு அதிகாரிகள் கண்டறிந்து நிரந்தர தீர்வு காண உள்ளனர். வரும் 7ம் தேதி இதுகுறித்து கூட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும், வரும் காலங்களில் பெரும்புதூர் மக்களவை தொகுதி முழுவதும் இருந்து சிறப்பு முன்னுரிமை அளிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றார்.அப்போது, காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் கோபால் உள்பட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...