×

சிட்லப்பாக்கம் இடுகாட்டில் குப்பை கொட்டுவது குறித்து கலெக்டர், மாசுகட்டுப்பாடு வாரியம், நிர்வாக அதிகாரி கொண்ட குழு அமைப்பு

சென்னை, பிப்.21: சிட்லபாக்கம் ஏரியில் குப்பை கொட்ட தடை உள்ளது. எனவே பஞ்சாயத்து நிர்வாகம் ஏரிக்கு அருகில் உள்ள இடுகாட்டில் குப்பை கொட்டி தீ வைப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதுகுறித்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அமர்வில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இடுகாடுகள் முறையாக பராமரித்து பல்லுயிர் பூங்கா அமைக்கப்படுகிறது. இத்திட்டம் முடிவடையாமல், இடுகாடு குப்பை கொட்டும் கிடங்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், குப்பையை எரித்து காற்று மாசு ஏற்படுத்துகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியமாக செயல்படுவதையே காட்டுகிறது.

எனவே உள்ளாட்சி அமைப்புகள், திடக்கழிவு மேலாண்மை விதியை பின்பற்றி, குப்பையை சேகரித்து, தரம் பிரித்து உரிய முறையில் திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும். சிட்லப்பாக்கம் இடுகாட்டில் குப்பை கொட்டுவது குறித்து, கலெக்டர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சிட்லப்பாக்கம் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவினர் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து குப்பை கையாள எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு மாதத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் மார்ச் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Group Organization ,Collector ,Pollution Control Board ,Administrative Officer ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...