ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

உசிலம்பட்டி, பிப். 21: மதுரை உசிலம்பட்டி அருகேயுள்ளது பாப்பாபட்டி. இந்த ஊரில் ஒச்சாண்டம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஏற்கனவே ஆச்சிகிழவி ஒச்சாண்டம்மன் என எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும், மற்றொரு பிரிவினர் இந்த பெயருடன் ஆண்டாயி என்ற பெயரைச் சேர்த்ததாகவும், இந்த பெயருடன் காத்தம்மாள் என்ற பெயரைச் சேர்க்க வேண்டும், அல்லது ஆண்டாயி என்ற பெயரை நீக்கவேண்டும் என்று கீரிபட்டி, மேய்க்கிழார்பட்டி கிராமமக்கள் 2 நாட்களுக்கு முன்பு கோயிலை திறக்ககோரி முற்றுகையிட்டனர். உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், கோயிலின் பெயரை நீக்ககோரிய ஒரு பிரிவினர் முற்றுகையிட்டனர். அப்போது, நீதிமன்ற உத்தரவை மதிப்பது நமது கடமையாகும், எனவே, அடுத்தபடியாக பேச்சுவார்த்தை நடத்துவோம் என ஆர்டிஓ உறுதியளித்ததால் முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: