காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு `கோம்போ’ கார்டு

திருப்பரங்குன்றம், பிப்.21: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கோம்போ கார்டு எனப்படும் ஏடிஎம் அட்டையுடன் கூடிய பல்கலைக்கழக அடையாள அட்டை வழங்க எஸ்பிஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு எஸ்பிஐ வங்கியும், பல்கலைக்கழகமும் இணைந்து ஏடிஎம் கார்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்றது.இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன், பதிவாளர் சங்கர், எஸ்பிஐ வங்கியின் நிர்வாக துணை இயக்குனர் ஜெ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

இந்த கோம்போ கார்டானது பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களின் புகைப்படத்துடன் ஒவ்வொரு மாணவர்களுக்கும் எஸ்பிஐ வங்கியால் வழங்கப்படும். இந்த வாங்கி கணக்கில் மாணவர்கள் எந்தவித டெபாசிட் தொகையும் செலுத்த தேவையில்லை. மேலும் மாணவர்கள் இந்த ஏடிஎம் அட்டையை நூலகம், ஆய்வகம், தங்கும் விடுதி ஆகிய இடங்களிலும் அடையாள அட்டையாக பயன்படுத்தி கொள்ளுமாறு பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மதுரை காமராஜர் பல்கலைகழகம், எஸ்பிஐ வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

Related Stories: