குழந்தை பருவ புற்றுநோய்க்கு இலவச சிகிச்சைக்காக மியூசிக்கல் ஸ்டேஜ் ஷோ மதுரை மீனாட்சி மிஷன் சார்பில் ஏற்பாடு

மதுரை, பிப்.21: குழந்தை பருவ புற்றுநோய்க்கு இலவச சிகிச்சையளிக்க மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ‘மியூசிக்கல் ஸ்டேஜ் ஷோ’ என்ற நிகழ்ச்சியை நாளை(பிப்.22) நடத்துகிறது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைபிரிவு, அறுவை சிகிச்சை மையம், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வசதிகள் உள்ளன. 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை, சுமார் 2100 புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 80 சதவீதம் பேருக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.குழந்தை பருவ புற்றுநோய்க்கான இலவச சிகிச்சைக்கென பிப்.22(நாளை) மாலை 6மணிக்கு மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் மியூசிக்கல் ஸ்டேஜ் ஷோ என்ற இசைநிகழ்ச்சி நடத்தப்படுகிறது. டிவி புகழ் பாடகர்கள் மணி அன்ட் பேண்டுடன் இணைந்து இசை விருந்தளிக்கின்றனர். ரூ.250 முதல் இதற்கென டிக்கெட் பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு 96266 08191, 98654 55005, 98652 04646 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இணையதள, www.mmhrc.in முகவரியிலும் முழு விபரங்கள் பெறலாம். இத்தகவலை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளம் மற்றும் வளர்ச்சித்துறை தலைவர் சுந்தர்ராஜ், புற்றுநோயியல் மையத்தலைவர் டாக்டர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: