மதுரை முடக்குசாலையில் புதிய டாஸ்மாக் கடை திறக்க ஐகோர்ட் தடை

மதுரை, பிப். 21:  மதுரையில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது. மதுரை, கோச்சடையைச் சேர்ந்த பாலுச்சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை முடக்குசாலை மேலக்கால் மெயின் ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கவுள்ளனர். கணேசபுரம் மற்றும் இந்திரா நகர் என குடியிருப்பு பகுதியில் அமைக்கவுள்ளனர். இந்த இடத்திற்கு கட்டிட வரைபட அனுமதி இல்லை. அருகில் விநாயகர் கோயில் உள்ளது. மிக அருகில் மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இதை எதிர்த்து அந்தப் பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்தப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் டாஸ்மாக் மதுக்கடை திறக்கத் தடை விதித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: