×

குஜிலியம்பாறை அருகே அச்சுறுத்திய மின்கம்பங்கள் உடனே அகற்றம்

குஜிலியம்பாறை, பிப். 21: தினகரன் செய்தி எதிரொலியாக குஜிலியம்பாறை அருகே சிதிலமடைந்து இருந்த மின்கம்பங்களை உடனே அகற்றி புதிய மின்கம்பங்கள் வைக்கப்பட்டன. குஜிலியம்பாறை அருகே டி.கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபட்டி கொடிக்காரனூர் களத்து பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு மெயின்ரோடில் உள்ள மின்கம்பத்தில் இருந்து இப்பகுதி குடியிருப்புகளுக்கு மின்சப்ளை செய்யப்பட்டது.இந்நிலையில் இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் பெயர துவங்கியது. நாளடைவில் சிமெண்ட் கலவைகள் முழுவதும் பெயர்ந்து தற்போது கம்பிகள் முழுவதும் வெளியே தெரியும்படி மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தன. இதுபோல் இச்சாலையில் உள்ள 4 மின்கம்பங்களும் கடந்த 5 ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் இருந்தன. இதனால் இவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடனே கடந்து வந்தனர்.இதுகுறித்து கடந்த பிப்.14ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மின்வாரிய துறையினர் நேற்று முன்தினம் சிதிலமடைந்த 5 மின்கம்பங்களையும் அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைத்தனர். மின்வாரிய துறையின் துரித நடவடிக்கைக்கு காரணமான தினகரன் நாளதழுக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Kujiliyampara ,
× RELATED சிஎம்டிஏ வாகன நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்