×

பூம்பாறையில் தகராறு செய்தவரை தட்டி கேட்டவர்களுக்கு கத்திரிக்கோல் குத்து

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூம்பாறையை சேர்ந்தவர் டாட்டா (23). திருப்பூரில் வேலை செய்து வருகிறார். தற்போது இவர் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருந்தார். திருவிழா முடிந்ததும் ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடந்தது. இதில் டாட்டா குடித்து தகராறில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் நிறுத்தியிருந்த டூவீலர்களை கீழே தள்ளி சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதை கண்டு அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (32), பாலமுருகன் ஆகியோர், ‘ஏன் இப்படி செய்கிறாய்’ என தட்டி கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த டாட்டா, தான் வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து இருவரையும் குத்தியுள்ளார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணகுமார் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து டாட்டாவை கைது செய்து செய்தனர்.

Tags : dispute ,
× RELATED தாடி வைத்திருந்ததை கிண்டல் செய்ததால்...