×

அய்யம்பாளையத்தில் குடிசை வீடு எரிந்து நாசம்

பட்டிவீரன்பட்டி, பிப். 21: அய்யம்பாளையத்தில் நடந்த தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து நாசமானது.பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் ராமலிங்க நகர் 12வது வார்டை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (34). குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பாண்டியம்மாள் தனது வீட்டில் விறகு அடுப்பில் சுடுதண்ணீர் போட்டு விட்டு தீயை அணைக்காமல் கடைக்கு சென்றுவிட்டார்.அப்போது தென்னமட்டையில் பற்றிய தீ எதிர்பாராத விதமாக குடிசை மீது பரவியது. தீ மளமளவென பரவியதில் குடிசை வீடு முழுவதும் பற்றி எரிந்தது. கடைக்கு சென்றிருந்த பாண்டியம்மாள் வீடு எரிவதை பார்த்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பிரிட்ஜ், துணிகள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.வீட்டில் காஸ் அடுப்புடன் 2 சிலிண்டர் இருந்துள்ளது. தீ எரிந்த போது அருகிலிருந்தவர்கள் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்து சிலிண்டரை பாதுகாப்பாக வெளியில் எடுத்து வந்துள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நமது உணர்வுகளை, நினைப்பதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதே மொழி எனப்படுகிறது. ஒரு குழந்தை, தாய் வழியாகத்தான் முதன்முதலாக மொழியை கற்றுக் கொள்கிறது. அதனால்தான் நாம் பேசும் மொழியை தாய்மொழி என்கிறோம். அதனால்தான் அந்த தினத்தை ஆண்டுதோறும் பிப்.21ம் தேதி, ‘உலக தாய்மொழி தினம்’ என கொண்டாடுகிறோம்.

ஏன் பிப்.21ம் தேதி என்கிறீர்களா? இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, உருதுமொழியை அரசு மொழியாக அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட சிலரே இம்மொழி பேசுவதாக கூறி, 1952ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்கதேசம்) மக்கள், வங்கமொழியை அரசு மொழியாக அங்கரீக்குமாறு தெரிவித்தனர். பின்னர் இது போராட்டமாக மாறியது. இதையடுத்து, 1952, பிப்.21ம் தேதி தாகாவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. உத்திரவினையும் மீறி தாகா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவாகத்தான், யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் பிப்.21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. மொழி, கலாச்சாரம், பண்பாடு பேணப்பட வேண்டும். மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தினம் கடைபிடிக்கப்பட்டது. பல நாடுகளில் ஒருமொழியே பரவலாக பேசப்படுகிறது. இந்தியா போன்ற நாட்டில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பல மொழி பேசும் மக்கள் உள்ளனர். ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளில், அவர்களது தாய்மொழி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. பொருளாதார ரீதியாகவும் இந்நாடு வளர்ச்சி அடைந்ததற்கு தாய்மொழிப்பற்றே முக்கிய காரணமாகும்.
மகாத்மா காந்தியடிகள் கூட, “ஒரு குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும், பள்ளியில் தோன்றும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். தெரியாத ஒரு மொழியின் மூலம் கல்வி கற்பிப்பது குழந்தைகளின் எண்ணங்களை பாதிக்கும். எனவே தாய்மொழியே பயிற்று மொழியாக இருப்பது சிறந்தது” என 1917ல் புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் பேசினார்.

உலக மொழிகளில் தமிழ் மிகவும் தொன்மையானது. ஏனைய மொழிகளைவிட மிகநீண்ட இலக்கண இலக்கிய மரபுகளை உடையது. அதனாலே தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் மொழியாகவும் தமிழ் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாரம்பரியம் கொண்டது தமிழ் மொழி என தமிழறிஞர்கள் தெரிவிக்கின்றனர். கீழடி ஆய்வில் கூட 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் நாகரீகம், மொழி, கட்டிடம், தொழில்ரீதியாக வெளிப்பட்டுள்ளது. எனவே, நம் தாய்மொழியை நாம் நேசிக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர், தமிழ் மீது ஆர்வமின்றி உள்ளனர். அனைத்துப்பள்ளிகளிலும் தமிழ் மொழியை சிறப்புப்பாடமாக கற்பிக்க வேண்டும். அதில் எழுத்து, பேச்சுப்போட்டிகள் நடத்தி, தமிழ் மொழியை வளர்க்க வேண்டும்.உலகளவில் பேசப்படும் சுமார் 6 ஆயிரம் மொழிகளில் 43 சதவீதம் மொழிகள் அழியும் நிலையில் உள்ளதாக ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. 40 சதவீதம் மக்களுக்கு பேசும் மொழிகளில் கல்வி பயில வாய்ப்பு வழங்கப்படவில்லை. மலைப் பகுதிகளில் வாழும் காணி, பணியர் உட்பட பழங்குடி மக்களின் பேச்சு வழக்கில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் தற்போது எழுத்து வழக்கில் இல்லை.நம் தாய்மொழியை பாதுகாப்பது நம்மை பெற்றெடுத்த தாயை பாதுகாப்பது போன்றது. எனவே, மொழியை பாதுகாப்போம். கூடுமானவரை தமிழிலேயே பேசுவோம்.

Tags : Cottage house ,Ayyampalayam ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் குடிசை வீடு தீயில் சாம்பல்