×

கிடு கிடுக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

அரூர், பிப்.21:  மொரப்பூர் ஒன்றியம், போளையம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மாரப்பநாய்க்கன்பட்டி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-13ம் ஆண்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. தொட்டியின் தூண்கள் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு தூண்கள் சேதமடைந்துள்ளது. விபத்துகள் ஏதும் நிகழும் முன்பு, சேதமடைந்துள்ள நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா