×

கல்லூரி மாணவி கடத்தல்

கிருஷ்ணகிரி, பிப்.21: ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி வெள்ளாளப்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண், ஊத்தங்கரை தனியார் மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக  கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால்,  அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்ைல. பின்னர், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதில் சின்னகனகம்பட்டி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் எங்கள் மகளை கடத்தி சென்றிருக்கலாம் என கூறியிருந்தனர். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்