×

ஓசூரில் இன்று கே.ஏ.மனோகரன் பிறந்த நாள் விழா

ஓசூர், பிப்.21: ஓசூரில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவும், ஐஎன்டியூசி தேசிய செயலாளருமான டாக்டர் கே.ஏ.மனோகரன் பிறந்த நாள் விழா, அவரது அலுவலகத்தில் நடக்கிறது. முன்னதாக அவர் பெற்றோர் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர், தனது அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடுகிறார். அதை தொடர்ந்து, ஆதரவாளர்களின் சார்பில் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது.

Tags : KA Manokaran ,birthday party ,Hosur ,
× RELATED பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த பாடகி...