×

நாமக்கல்லில் வேளாண் திருவிழா

நாமக்கல், பிப்.21:  நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், வேளாண் திருவிழா,  கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, வரும் 23ம் தேதி நாமக்கல்- பரமத்தி ரோடு  பாவை மஹால் திருமண மண்டபத்தில் துவங்குகிறது. இதுகுறித்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்  அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாமக்கல்  வேளாண் மை அறிவியல் நிலையம் மற்றும் நாமக்கல் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை  முகமை சார்பில், விவசாயிகள் நிலையான வருமானம் பெற, வேளாண் திருவிழா-2020, வேளாண்  கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி வரும் 23ம் தேதி நாமக்கல்லில் துவங்குகிறது. இந்நிகழ்ச்சியில், மண்வள  மேளாண்மை, இயற்கை மேலாண்மை, ஒருங்கிணைந்த மேளாண்மை, பயிர்களின் பூச்சி  மற்றும் நோய் மேளாண்மை, நீர் மேளாண்மை முறைகள், நுண்நீர் பாசனம், சிறுதானிய  சாகுபடி மற்றும் மதிப்புட்டுதல், பசுந்தீவன சாகுபடி, வேளாண் காடுகள்  அமைத்தல், தேனீ மற்றும் காளான் வளர்ப்பு, மாடி காய்கறி தோட்ட சாகுபடி,  வேளாண் கருவிகளின் பயன்பாடு, கால்நடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம்,  நாட்டுக்கோழி வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு, விவசாயிகளின் கண்டுபிடிப்பு  மதிப்பூட்டிய பால் மற்றும் இறைச்சி பொருட்கள் பற்றிய கண்காட்சிகள் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்கில் இயற்கை வேளாண் வழி முறைகள்,  ஒருங்கிணைந்த பண்ணையம், தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய்  மேலாண்மை குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் பேசுகிறார்கள். கண்காட்சியில் அரசு துறை, வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளின் திட்டங்கள், தனியார் நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்படுகிறது.

Tags : Agricultural Festival ,Namakkal ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...