தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரிக்கு விருது வழங்கல்

விழுப்புரம், பிப். 21: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கவியரசர் கலை தமிழ்ச்சங்கம், சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகளை நடத்தியது. இப்போட்டிகளில் விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் விருதுகளையும் பெற்றனர். கல்லூரியின் இத்தகைய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை பாராட்டும் விதமாக கவியரசர் கலை தமிழ்ச்சங்கம் “தமிழகத்தின் தலைசிறந்த கல்விச்சேவை சாதனைக்கான ஞானதீபாலயம் விருது-2019” தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. மேலும், மாணவியர் புல முதன்மையர் கண்மணி அன்புச்செல்வி மற்றும் தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் வனிதா ஆகியோருக்கு “சேவா ரத்னா-2019” விருதையும், மாணவி சாருபாலாவிற்கு கவிதைக்கலையரசி விருதையும், மாணவி நிஷாந்திக்கு ஓவிய மணி முரசு விருதையும், மாணவிகள் தீபிகாதேவி மற்றும் மாலினி ஆகியோருக்கு இலக்கிய எழிலரசி விருதையும் வழங்கி கவுரவித்தது. விருது பெற்ற மாணவிகள் மற்றும் பேராசிரியர்களை இ.எஸ். கல்வி குழுமத்தின் தலைவர் சாமிக்கண்ணு, கல்லூரி செயலாளர் செந்தில்குமார், இ.எஸ். கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் சவுந்தரராஜன், கல்லூரி முதல்வர் முனைவர் அருணகுமாரி ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: