2வது நாள் விளையாட்டு போட்டி ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

கள்ளக்குறிச்சி, பிப். 21:  முதலமைச்சர் கோப்பைக்கான கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஏகேடி பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமை தாங்கி போட்டிகளை துவக்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டியானது 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று 2வது நாளாக நீச்சல் போட்டி, அதாவது பேக் ஸ்டோக், பிரஸ்ட் ஸ்டோக், பட்டர் பிளை, பிரிஸ்டைல் போட்டிகள் நடந்தது. மேலும் ஜூடோ, குத்துச்சண்டை ஆகிய போட்டிகள் நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக அரசு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு போட்டியினை நடத்தினர். இறுதிநாள் போட்டியானது இன்று (21ம் தேதி) நடக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.1000ம் வழங்கப்படும். 2வது பரிசாக ரூ.750ம், 3வது பரிசாக ரூ.500 வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

Related Stories: