சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு

சுரண்டை, பிப். 21:  சேர்ந்த மரம் பகுதியில் மத்திய அரசு நிதியில் நடைபெற்ற பணிகளை மத்திய திட்டக் குழு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலநீலிதநல்லூர்  யூனியனுக்குட்பட்ட சேர்ந்தமரம் மஜரா பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில்  கடந்த 2016-17ம் நிதியாண்டு முதல் தற்போது வரை தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டத்தில் நடைபெற்ற பணிகள், பஞ்சாயத்து அலுவலக கட்டிடங்கள், அங்கன்வாடி  கட்டிடங்கள், தடுப்பணைகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், வேளாண்மைத்துறை  மூலம் நடைபெற்ற திட்டங்கள், புதுவாழ்வு திட்டம் மற்றும் பல்வேறு மத்திய அரசு  நிதிகளில் நடைபெற்ற பணிகள் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் பணிகளை  டெல்லி ஊரக வளர்ச்சி திட்ட மத்திய குழு உறுப்பினர்கள் மோகன்தாஸ்,  முத்துக்குமார், மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுமதி, மேலநீலிதநல்லூர் வட்டார  இயக்க மேலாண்மை அலுவலர் கருப்பசாமி, வட்டார சமூகத் திட்ட தணிக்கை அதிகாரி  முத்துச்செல்வி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி  அதிகாரி சிவகுமார், யூனியன் பொருளாளர் முருகேசன், யூனியன் பணி  மேற்பார்வையாளர் ராஜேந்திரகுமார், வட்டார வளர்ச்சி துணை அலுவலர்கள்், சிவா,  சேர்ந்தமரம் கிராம நிர்வாக அலுவலர் சரவண பிரபு மற்றும் சுய உதவிக்குழு  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய குழுவினரை சேர்ந்தமரம்  கஸ்பா பஞ். செயலாளர் யோகநாதன், மஜரா பஞ்சாயத்து செயலாளர் கந்தசாமி  ஆகியோர் வரவேற்றனர்.

Related Stories: