×

புளியரை சாலையோரத்தில் மீண்டும் கேரள கழிவுகள் வீச்சு

செங்கோட்டை, பிப். 21:  புளியரை சாலையோரத்தில் மீண்டும் கேரள கழிவு மூட்டைகள் வீசப்பட்டு உள்ளது.
செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பால்,  உணவுப்பொருட்கள், சிமென்ட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன இவ்வாறு செல்லும் வாகனங்கள் மீண்டும் திரும்பி வரும்போது கேரளாவில் இருந்து பல்வேறு கழிவுப்பொருள்களை கொண்டு வந்து  தமிழக பகுதிகளில் கொட்டுவது தொடர் கதையாகி வருகின்றன  கடந்தாண்டு கழிவுகள் ஏற்றி வரப்பட்ட 28 லாரிகளை சுகாதாரத்துறையினர் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர்.  எனினும் இதுபோன்ற கழிவுகளுடன் லாரிகள், அவ்வப்போது தமிழகத்திற்குள் நுழைந்த வண்ணம் உள்ளன. நேற்று மாலையில் கொல்லம் -திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் புளியரை தாட்கோ நகர்  அருகே உள்ள வயல்வெளிகளில் கழிவுகள்  மூடை மூடையாக  வீசி செல்லப்பட்டுள்ளன. சோதனைச்சாவடிகளில் வாகனங்களை முழுமையாக பரிசோதிக்காததால்  இதுபோன்ற அத்துமீறல்கள் தற்போது மீண்டும் தொடர்கின்றன. எனவே இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் மீண்டும் சோதனை சாவடியில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kerala ,road ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...