×

சங்கரன்கோவில் அருகே போக்சோவில் வாலிபர் கைது

சங்கரன்கோவில், பிப். 21:  சங்கரன்கோவில் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணியை சேர்ந்தவர் பால்சாமி மகன் துரை என்கிற ரஞ்சித் (24).  கூலி தொழிலாளியான இவர், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் துரை என்கிற ரஞ்சித்தை கைது செய்தனர்.

Tags : Poksov ,Sankarankoil ,
× RELATED சென்னையில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது