×

அங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலை

வீரவநல்லூர், பிப். 21: வீரவநல்லூரை அடுத்த அத்தாளநல்லூரை சேர்ந்தவர் நயினார்பாண்டியன் மனைவி சிவகாமி (46). இவர், சேரன்மகாதேவி மல்லிகா நகரில் உள்ள அங்கன்வாடியில் பணியாளராக வேலை செய்துவந்தார். இவரது கணவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் சிவகாமி கடன் வாங்கி, தனது 2 மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடன்சுமை காரணமாக அவர், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சிவகாமி அளவுக்கதிகமாக தூக்க மாத்திரகளை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகாமி உயிரிழந்தார். வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED மனைவி கண்டித்ததால் ஊழியர் தற்கொலை