நெல்லை புறநகர், மாநகர் திருத்தி அமைப்பு

நெல்லை, பிப். 21: நிர்வாக வசதிக்காக நெல்லை புறநகர், நெல்லை மாநகர் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளதாக மதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து, நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நெல்லை புறநகர் மற்றும் நெல்லை மாநகர் மாவட்டக் கழகங்கள் நிர்வாக வசதிக்காக நெல்லை புறநகர் மாவட்டம், நெல்லை மத்திய மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் என மூன்று மாவட்டமாக திருத்தி அமைக்கப்படுகிறது.அதன்படி, நெல்லை புறநகர் மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நகர, ஒன்றிய கழகங்கள் அடங்கும். நெல்லை மத்திய மாவட்டத்தில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் ஒன்றியக் கழகங்கள் அடங்கும். தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி),  கடையநல்லூர், தென்காசி மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட  ஒன்றிய, நகர கழகங்கள் அடங்கும்.

உவரி எம்.ரைமண்ட், நெல்லை புறநகர் மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவராகவும், விஜய அச்சம்பாடு வி.சஞ்சீவிகுமார், மறுகால்குறிச்சி செ.துரைசாமி, அம்பாசமுத்திரம் சு.முத்துசுவாமி, திருக்குறுங்குடி மு.மணிகண்டன், வீரவநல்லூர் சு.வேலம்மாள், களக்காடு வா.வேலுமயில், திருவம்பலபுரம் டி.நாகூர் மீரான், பணகுடி மு.சங்கரகுமார் ஆகியோர் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள்.நெல்லை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக இயங்கி வந்த கே.எம்.ஏ.நிஜாம் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். நெல்லை புறநகர் மாவட்ட பொறுப்பாளராக இயங்கி வந்த வழக்கறிஞர் தி.மு.ராசேந்திரன், தென்காசி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். அந்தந்த மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ள நெல்லை புறநகர், நெல்லை மத்தியம் மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: