×

பணம் கேட்டு மிரட்டிய கோவை வாலிபர் கைது

தூத்துக்குடி, பிப்.21:தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய கோவை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்(52). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோவை மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த அப்துல்ரஹீம்(32) என்பவர், ஆறுமுகத்திடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் ஆறுமுகம் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆறுமுகத்திற்கு அப்துல்ரஹீம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆறுமுகம் தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ரஹீமை கைது செய்தனர். அவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Coimbatore ,
× RELATED சென்னை கோயம்பேட்டில் மளிகை பொருட்கள் விற்பனை 27,28 தேதிகளில் நிறுத்தம்