×

சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை

தூத்துக்குடி, பிப்.21: சவலாப்பேரியை சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனு:ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சவலாப்பேரியை சேர்ந்த எங்கள் சமுதாயம் குறித்து மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களில் இழிவாக பேசியும், சாதி கலவரத்தை தூண்டும் விதமாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக வீடியோ பதிவு செய்து உள்ளார். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த பதிவை தடை செய்ய வேண்டும்என கூறியுள்ளனர்.


Tags :
× RELATED ஊரடங்கு உத்தரவால் அதிகரித்த...