×

விபத்து நடந்தால் ஒரு மணி நேரம் கழித்தே ஆம்புலன்ஸ் வருகிறது

சென்னை, பிப். 21: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா (திமுக) பேசும்போது, “ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தர வேண்டும். 108 அவசர கால ஊர்திக்கு போன் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பிறகுதான் ஆம்புலன்ஸ் வருகிறது.

அமைச்சர் வேகமாக பதில் சொல்கிறார். ஆனால் அமைச்சர் வேகத்துக்கு ஆம்புலன்ஸ் சேவை இல்லை” என்றார்.அமைச்சர் விஜயபாஸ்கர்: சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் 8.2 நிமிடத்திலும், கிராம பகுதியில் 13.5 நிமிடத்திலும், மலை பகுதியில் 16.5 நிமிடத்திலும் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது. ஒரு மணி நேரம் என்பது தவறான குற்றச்சாட்டு. தினசரி 108 அவசர கால ஊர்தி கேட்டு 15 ஆயிரம் அழைப்புகள் வருகிறது என்றார்.


Tags : accident ,
× RELATED போலீசார் மறுத்ததால் ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பீகார் பெண்