×

கோவில்பட்டியில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

கோவில்பட்டி, பிப்.21: கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் இன்று (21ம் தேதி) நடக்கிறது.    இதுகுறித்து கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா விடுத்துள்ள செய்திகுறிப்பு:   கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்து வருகிறது. இம்மாதத்திற்கான குறைதீர் கூட்டம் இன்று (21ம்தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது.    இதில கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் ஆகிய வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களுடன் பங்கேற்று மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Tags :
× RELATED கவலைகள் தீர்க்கும் திருவாலங்காடு காளி