×

திருச்செந்தூரில் நாளை மணிமண்டப திறப்பு விழா தூத்துக்குடியில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தூத்துக்குடி, பிப்.21: திருச்செந்தூரில் நாளை  சிவந்தி ஆதித்தனார்  மணி மண்டபத்தை திறந்து வைக்க வருகை தரும்  முதல்வருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கடம்பூர்ராஜு, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைக்கவும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திறந்து வைக்கவும் நாளை (22ம்தேதி) தூத்துக்குடி மாவட்டம் வருகைதரும் முதல்வர் எடப்பாடி  பழனிசாமியை வரவேற்க வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில்  சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகைக்குளம் விமான நிலையத்தில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருகை தரும் முதல்வருக்கு மருத்துவமனை நுழைவாயிலிலும், பின்பு முத்தையாபுரம், முள்ளக்காடு, பழையகாயல், முக்காணி, வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதிகளில் அதிமுகவினரும் பொதுமக்களும், பெருந்திரளாக வந்து முதல்வரை வரவேற்கின்றனர். பின்னர் வீரபாண்டியன்பட்டணத்திலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. முதல்வரை வரவேற்க  தலைமை நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், தொண்டரணியினர், மகளிரணியினர், பொதுமக்கள்  என அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரவேற்பு இடத்தில் முதல்வரை வரவேற்க  திரளாக வரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : Thiruchendur ,Tuticorin ,
× RELATED திருச்செந்தூர் கோயில் மூடப்பட்டதால்...