×

விபத்து எச்சரிக்கை அறிவிப்புக்கு சிவப்பு நிற கேரி பேக்?

காங்கயம், பிப்.21:காங்கயம் பேருந்து நிலையம் அருகே, திருப்பூர் நெடுஞ்சாலையில், சாலைக்கு அடியில் பாதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் பழுதடைந்து, தண்ணீர் சாலையில் ஓடி வீணாகி வருகிறது. அப்போது சாலையில் ஏற்படும் பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறையோ, நகராட்சி நிர்வாகமோ சரி செய்வதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்தப் பள்ளங்களில் வாகனங்கள் விழுந்து விடாமல் இருக்க, பள்ளத்திற்கு முன்பு விபத்து எச்சரிக்கை குறித்த அறிவிப்பு எதுவும் வைக்கப்படுவதில்லை.இதனால், இப்பகுதி மக்கள் வாகன ஓட்டுநர்களை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளத்தில் ஒரு குச்சியை  நட்டு வைத்து, அதில் சிவப்பு கலர் கேரி பேக்கை தொங்க விடுகின்றனர். எனவே, இந்த சாலைப் பள்ளங்களை சரி செய்யுமாறு வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது